இச்சொற்களின் இலத்தீனிய பின்புலத்தில் "dissertation" மற்றும் "thesis" (பன்மை, "theses") என்பன ஒரே பொருளானவை அன்று. தொன்மை பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளரின் விரிவுரைக்குப் பின்னர் வழமையாக இணக்கமின்மைகள் உரையாடப்படும். இச்சமயத்தில் மாணவர்கள் சில கருத்துக்களை முன்வைத்து விவாதிப்பர். ஒரு விரிவுரையில் முன்மொழியப்படும் கருத்துரு thesis எனவும் அதனை எதிர்கொள்ளும் கருத்துருக்கள் dissertation எனவும் அழைக்கப்பட்டன. Olga Weijers: The medieval disputatio. In: Hora est! (On dissertations), p.23-27. Leiden University Library, 2005