"அதாவது சாதிப்படி நிலையில் மேல்நிலையைச் சாதிப்பதற்கு அடித்தளச் சாதியினர் சமஸ்கிருதக் கலாச்சாரத்தை சுவீகத்துக் கொள்ள வேண்டும் என்பதாகத் தான் சுத்தி அமைந்தது. இது அடிப்படையில் உயர்சாதியினரை ‘‘தூய சாதியினர்’’ என்றும் அடித்தளச் சாதிகளைத் ‘‘தூய்மை அற்றோர்’’ என்றும் கூறும் பழைய பிராமணியத்தை விமர்சனமின்றி ஏற்றுக் கொள்கிறது. அதே அடிப்படையில் சுத்தி எனும் சடங்கை நிகழ்த்துகிறது. இது அடித்தள மக்களை கேவலப்படுத்துவதாகும்." பஞ்சாபில் ஆரிய சமாஜம் ந.முத்துமோகன்